Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12 அக்., 2011

ஒரு கவிதை அழுகின்றது...!!!



பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்!
காய்ந்து வரண்ட எனக்குள் என் பச்சை இதயம்...
படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்!
என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...!
இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!!

நான் புரளும் மண்ணின் வெட்பம் என்
மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது!
அவிந்து போகையிலும்... உன்
நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...!
உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!!

கரைந்து போகும் உன் காதல் கரைகளில்...
பெருகிவரும் கடலாய் என் காதல் !
உன் கரை தொடுகின்ற ஒவ்வொரு அலையும்,
விலகிப்போகும்போது உணரும் பிரிவு வலிகள்....
மீண்டும் மீண்டும் தொட்டுத் தொடர்கின்றன!!!

பரந்து விரிந்த வானமாய் என் மனசும்,
திறந்தே கிடக்கின்றது வெறுமையாய்!
உன்னை மட்டுமே உட்கொள்ள
தயாரான என்  மன வெளிகளில்...
கருமுகில்களாய் கருமை போர்க்கும் "சில"!!!!

சுட்டெரிக்கும் சுவாலைகள் குளிர்மைதான்!
உன் வார்த்தைகளை விட...!!
எரிந்து சாம்பலாகும் வரைக்கும்...
வலிக்கும் வலியைவிட கொடிது என,
உணர்கின்றேன்! அழிந்து.... அழுகின்றேன்!!!

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்,
திணறும்போது கூட.... உன் பெயரை உச்சரித்தபடியே,
இவன் செத்துப் போனான் என்ற செய்தி....
உன் காதில் விழுந்தால்தான்,
உன் மனம் மகிழுமென்றால்....

இந்தப் புழுவாய் இப்போதே செத்துப்போகின்றேன்....!!!
சுமைதாங்கி ஊர்திகளின் சுமைகளின் அடியில்,
என் உடல் சிதறி... பச்சை ரத்தம் பீறிட்ட பிறகு,
என் சின்ன இதயத்தில் இருந்த சுமைகளும்
சிதறிப் போகுமென்றால்............................. :(

11 அக்., 2011

தேவதைகளின் முதலிரவு...!!!


தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை!
பேசி முடித்ததில் திருப்தியில்லை!
"கண்டவன்" என பெற்றவர் சொன்னதை,
"வந்தவன்" கொண்டதாய் இல்லை!
வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!!

வாழும் காலம் முழுதும்,
அவன் வாழ்வதைப் பார்த்து...
கண்களைக் கசக்கியபடியே...
கசக்கிய விழிகளிலும்,
"அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!!

என்னவென்று சொல்லியழ முடியாமலும்,
"ஓ"வென்று கதறியழ இயலாமலும்,
இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்...
நசுங்கிப் போகின்றது - தேவதைகள்
கசக்கி எறிந்த காதல்கள்!!!

அதைப் பொறுக்கியெடுத்து...
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
தேவைகளின் தேவர்களுக்கு...
தேவதைகளின் அழுகுரல்கள்,
என்றைக்கும் கேட்பதில்லை!!!
 
தேவதைகளின் இரவுகள்...
முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்...!
அவர்களின் அழுகுரல்களை...
குரைக்கும் நாய்களும்... இரவின் இருட்டும்....
யாருக்கும் தெரியாமல் அடக்கி விடுகின்றன!!!

மனம் மாறிய தேவதைகளின்,
வாழ்க்கைகளும் மனங்கோணிப் போன...
கதைகள் பல இருந்தும்...
மனம் மாறத் துடிக்கும் தேவதைகளுக்கு...........
இக்கவிதை சமர்ப்பணம்!!!