சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!!
கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!
எங்கே நீ சென்றாலும்...
என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே வானவில் வீடு கட்டி...
உனக்காய் வாசல் வரையுமடி... !!
உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?
பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??
எனக்கே எனக்கென எனக்காக... உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென உனக்காக... எனையே தருவேன் எமக்காக...!!
********** ********** ********** ********** **********
© ஒருவன்