எனக்குள் ஒரு தேவதையின் ஓவியமாய் நுழைந்தவள் நீ...!
காதலில் இருந்து தூரமாய் சென்றுகொண்டிருந்த எனக்கு - அதன்
இனிமையை பக்கத்திலிருந்து அள்ளிக்கொடுத்தவள் நீ...!
என் வாழ்க்கையில்.... நம்பிக்கைகள்.. ஆசைகள்..
அனுபவங்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. இலட்சியங்கள் என,
நிறையவே விதைத்தவள் நீ...!
காதலையும்.. அதன் உண்மையையும்..
பிரிந்தாலும் வாழும் அன்பு என,
நீயும் நானும் நம் காதலுமாயும்தானே பார்த்தோம்...!
சின்னச் சின்ன ஊடல்... அதன்பின் செல்லமான
மன்னிப்புக்களோடு சேர்தல் என,
நீயும் நானும் நம் காதலும் என சேர்ந்துதானே செய்தோம்...!
உனது கவலையில் நானும்... எனது கவலையில் நீயும் .....
நம் காதலுமென,
ஒன்றாய்ச் சேர்ந்துதானே அழுதோம்!
ஆனால் இன்று, நான் மட்டும் வெடித்து அழ... எங்கே நீ...???
நம் காதல் என்னோடு மட்டும்தானா ???
ஒன்றை மட்டும் புரிந்துகொள் என்னுயிரே!!!
நான் உயிரோடு வாழும்வரை...
என் கடைசி மூச்சு இழுக்கும்வரை...
"எம் காதல்" அநாதையாகிவிடாது... கவலைப்படாதே!!!
2 கருத்துகள்:
சோகம் கொட்டுகிறது காதல் என்றும் அழிவதில்லை.
காதல் சோகங்களிலும் ஏதோ சுகமிருக்கும்......:)
கருத்துரையிடுக