Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

10 நவ., 2011

நிலவைத் தேடி...

என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க,
ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி,
கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்...
முகவரியில்லாத தேசமொன்றில்!!!

அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்...
அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும்,
என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில்,
அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!!

இன்னும் நிலவைத் தேடியபடி.... நான்,
முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!

5 கருத்துகள்:

பொன் வானவில் சொன்னது…

Please write more. Very artistic layout.

நிலாமதி சொன்னது…

அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்..நான்,

பசியோடு!.நான்,.........excellent

Unknown சொன்னது…

மிக்க நன்றி ... சகோதரி கோதை மற்றும் நிலா அக்கா!
எல்லோருக்கும் உள்ள ஆசைதான் எனக்கும்... அம்மாவின் நிலாச்சோற்றை சாப்பிட இன்னும் பசியோடு.... காத்திருக்கின்றேன்!

சகோதரி கோதை!
தாங்கள் தமிழில் பின்னூட்டம் இட்டால் இன்னும் மகிழ்வேன்!

Latest Tamil Cinema News சொன்னது…

Really Super Boss Congratz.... I like very Much

Tamil Cinema News

Unknown சொன்னது…

மிகவும் நன்றி தங்களின் கருத்துக்கும் பாராட்டுதலுக்கும்....
தொடர்ந்தும் தங்களின் விமர்சனங்களை வரவேற்கின்றேன்! :)

கருத்துரையிடுக