பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன்
உன்னால்தானே தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்
செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!!
கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!!
வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா?
கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில்
அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு !
வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம் சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!
போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என் வாழ்வின் வண்ணக்கோலம்
குறிப்பு:
"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.
2 கருத்துகள்:
வணக்கம்
அருமையான காதல் கவிதை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாங்கள் தொடர்ந்து அளித்துவரும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரூபன்.
அன்புடன்...
ஒருவன் ~ கவிதை
கருத்துரையிடுக