Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12 அக்., 2011

ஒரு கவிதை அழுகின்றது...!!!



பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்!
காய்ந்து வரண்ட எனக்குள் என் பச்சை இதயம்...
படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்!
என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...!
இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!!

நான் புரளும் மண்ணின் வெட்பம் என்
மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது!
அவிந்து போகையிலும்... உன்
நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...!
உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!!

கரைந்து போகும் உன் காதல் கரைகளில்...
பெருகிவரும் கடலாய் என் காதல் !
உன் கரை தொடுகின்ற ஒவ்வொரு அலையும்,
விலகிப்போகும்போது உணரும் பிரிவு வலிகள்....
மீண்டும் மீண்டும் தொட்டுத் தொடர்கின்றன!!!

பரந்து விரிந்த வானமாய் என் மனசும்,
திறந்தே கிடக்கின்றது வெறுமையாய்!
உன்னை மட்டுமே உட்கொள்ள
தயாரான என்  மன வெளிகளில்...
கருமுகில்களாய் கருமை போர்க்கும் "சில"!!!!

சுட்டெரிக்கும் சுவாலைகள் குளிர்மைதான்!
உன் வார்த்தைகளை விட...!!
எரிந்து சாம்பலாகும் வரைக்கும்...
வலிக்கும் வலியைவிட கொடிது என,
உணர்கின்றேன்! அழிந்து.... அழுகின்றேன்!!!

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்,
திணறும்போது கூட.... உன் பெயரை உச்சரித்தபடியே,
இவன் செத்துப் போனான் என்ற செய்தி....
உன் காதில் விழுந்தால்தான்,
உன் மனம் மகிழுமென்றால்....

இந்தப் புழுவாய் இப்போதே செத்துப்போகின்றேன்....!!!
சுமைதாங்கி ஊர்திகளின் சுமைகளின் அடியில்,
என் உடல் சிதறி... பச்சை ரத்தம் பீறிட்ட பிறகு,
என் சின்ன இதயத்தில் இருந்த சுமைகளும்
சிதறிப் போகுமென்றால்............................. :(

11 அக்., 2011

தேவதைகளின் முதலிரவு...!!!


தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை!
பேசி முடித்ததில் திருப்தியில்லை!
"கண்டவன்" என பெற்றவர் சொன்னதை,
"வந்தவன்" கொண்டதாய் இல்லை!
வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!!

வாழும் காலம் முழுதும்,
அவன் வாழ்வதைப் பார்த்து...
கண்களைக் கசக்கியபடியே...
கசக்கிய விழிகளிலும்,
"அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!!

என்னவென்று சொல்லியழ முடியாமலும்,
"ஓ"வென்று கதறியழ இயலாமலும்,
இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்...
நசுங்கிப் போகின்றது - தேவதைகள்
கசக்கி எறிந்த காதல்கள்!!!

அதைப் பொறுக்கியெடுத்து...
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
தேவைகளின் தேவர்களுக்கு...
தேவதைகளின் அழுகுரல்கள்,
என்றைக்கும் கேட்பதில்லை!!!
 
தேவதைகளின் இரவுகள்...
முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்...!
அவர்களின் அழுகுரல்களை...
குரைக்கும் நாய்களும்... இரவின் இருட்டும்....
யாருக்கும் தெரியாமல் அடக்கி விடுகின்றன!!!

மனம் மாறிய தேவதைகளின்,
வாழ்க்கைகளும் மனங்கோணிப் போன...
கதைகள் பல இருந்தும்...
மனம் மாறத் துடிக்கும் தேவதைகளுக்கு...........
இக்கவிதை சமர்ப்பணம்!!!

23 செப்., 2011

காமத்துப்பால் - 2 : சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்!

சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்!
சூடான பாலை -வனத்திலே .... நீராடினோம்!!
என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது!
மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!!

தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என்
முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ???
பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு!
பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!!

இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில்,
நம் பயணம் தொடர்ந்தபோதும்...,
சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்...,
பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!!

மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்...
அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு
பாதி தெரிந்த உருவங்கள்... தெறித்த திரவங்கள்   என,
முற்றிலும் தீர்ந்து நிசப்தமாய் ஆகி.... இறுக்கிய கரங்களில்,
அவள் மட்டுமே இருந்தாள்!

காதல்,காமம் என்ற சொற்பதங்கள் தரும் அர்த்தம்,
முழுமையாய்ப் புரிந்தது அன்றல்ல!!!!!
தொடர்ந்த புணர்வுகள்... தந்த உணர்வுகளை விட,
எம் இறுக்கங்கள்... தந்த கிறக்கங்களை விட...

நான் அப்பாவும் அவள் அம்மாவுமென ஆகியதாய் உணர்ந்த...
அந்தக் கணப்பொழுதில்... முழுமையாய்ப் புரிந்து,
முழுமையடையும் ஒன்றுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம்!
சிற்றின்பம் தாண்டிய பேரின்பம்.... காதலோடு காத்திருக்கின்றது!
"உறவுகள்" தொடரும்..................!

9 செப்., 2011

காமத்துப்பால்

தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய்,
தளர்வதற்காய்த் தள்ளாடும்...
தேகங்களின் தேடல்களுக்கு,
இடுக்களில் வடிந்தோடும் - மன்மத
நீரில் நீந்தியபடியே...
உயிர் பிரியும் போராட்டம்!!!

பதின்மங்களில் பெற்றதை
பலமுறை பழகிப் பார்க்க,
தவறிய சந்தர்ப்பங்களை...
இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய்
பயின்றிடத் துடிக்குது,
நெஞ்சம் - கொஞ்சம்!
ஆனாலும் பக்கத்தில் இல்லையே...
என் மஞ்சம்!!!


"இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால்,
அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"

7 செப்., 2011

உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!

"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து
ரொம்ப நாளாச்சு!
அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் 
நிறையவே கொட்டிக் கிடக்குது!
சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... 
அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்...
ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை!
ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! 
அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று,
என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்!

சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும்,
நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!!

என்னை  நேசிக்கும் நட்புக்காய்
 உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!