நீ அழும்போது தன் தோள்கொடுக்கும் ....சாய்ந்து கொள்ள!
உனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே...
உன்னைவிட அதிகமாய் அழும் உள்ளுக்குள்ளே!
நீ சிரிக்கும்போது ... தூரத்தில் நின்று பார்த்துமகிழும்...!
உன்னைவிட அதிகமாய் சந்தோசப்படும் மனதுக்குள்ளே!
நீ விழும்போதெல்லாம் உன்னை தூக்கிநிமிர்த்தும்!
தவறும்போது வழிகாட்டும்! மீறும்போது கண்டிக்கும்!
பிரியும்போது வாடும்... சேரும் போது மகிழும்!
எதையும் இழக்கும்... எதையும் கொடுக்கும்!
எங்கிருந்தாலும் வாழ்த்தும்!
இறுதிவரை... உன்னைவிட உன்னை அதிகமாக நேசிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக