12 ஆக., 2011
கொம்பு முளைத்த மானிடங்கள்
இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும்,
பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்!
அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!!
அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!!
அவர்களை நினைத்தாலே போதும் ...
ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும்.
அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!!
அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான்.
அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான்.
வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு.
வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும்.
என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா?
பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் ,
காலையிலெழுதலும் காலைக்கடன்களின்பின் பொழுது களித்தலும் ,
சொந்தமும் பந்தமும்... ஆதியும் அந்தமும் என,
அத்தனை இயற்கையையும் கொண்டவர்களாய்...
என்றாவது நாம், நினைத்தாவது பார்த்திருக்கின்றோமா?
நாம்தான் அவர்கள் தலையில் கொம்பு வைக்கின்றோம்!
கடைசியில்... அந்தக் கொம்பில்,
குத்துப்படுவதும் நாங்கள்தான்...!
குதறப்படுவதும் நாங்கள்தான்...!!
ஏறவிட்ட படிகளும் அரியாசனங்கள்தான்!
இதை நாம் உணரப்போவது எப்போது........??????????
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக