23 ஆக., 2013
நானொரு ஏதிலி...
சுற்றமும் உற்றமும்
ஊர் முற்றமும் முழு நிலவும்
கவளச் சோறும் கருவாடும்
பனங்கட்டியும் பணியாரமும்
மண்சட்டியும் கல்லடுப்பும்
தட்டை வடையும் எள்ளுப்பாகும்
ஒடியல்கூழும் நண்டுக்கறியும்
ஊறுகாயும் மோர்மிளகாயும்
ஆலமரமும் பிள்ளையார் கோயிலும்
வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும்
கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும்
மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும்
பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும்
பூவரசும் நாதஸ்வரமும்
வாழைமரமும் பாலைப்பழமும்
வல்லைவெளியும் முல்லை நிலமும்
பள்ளிக்கூடமும் பழைய நண்பரும்
சித்திரைவெயிலும் செவ்விளநீரும்
மாரி மழையும் மண்வாசமும்
மதவடியும் உதயன் பேப்பரும்
லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும்
பேரூந்தும் புழுதிக்காற்றும்
கடற்கரையும் மணல்வீடும்
கட்டுமரமும் உடன்மீனும்
குழற்புட்டும் முட்டைப்பொரியலும்
சுடுதோசையும் இடிசம்பலும்
பாலப்பமும் இடியப்பமும்,
இனியெப்பவும் கிட்டாத....பார்க்கமுடியாத.......
என் பென்னம்பெரிய பேராசைகளாயிப்போனதோ...???
நானொரு ஏதிலி என்பதால்.....!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக