எந்திரமான எண்ணங்களுக்கு
தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்!
பத்திரமான மனசுக்குள்ளே
சித்திரமாய் சிரிக்கிறாய்!
சொல்ல வரும் சேதி...
மெல்ல வந்து மோதி...
வெள்ளமாய் மேவி...
கள்ளமாய்த் தாவி...
செல்லமாய் நுழைகிறாய்!
வட்ட நிலா வானத்தில்
உன் முகமாய்த் தெரியுதடி!
கிட்டவந்து முற்றத்தில்
வானவில்லும் மிளிருதடி!
கதவடியில் நாய்க்குட்டி...
காலடியில் பூனைக்குட்டி...
அத்தனை காவலையும் தாண்டிவந்து,
கனவுக் கண்ணிகளை
என் கண்களுக்குள் புதைத்துவிட்டு...
அப்பாவியாய்த் தப்பிக்கிறாய்!
கொஞ்சம் நில்லடி கள்ளி..!
உன்னிடம் ஒரு கேள்வி...!!
என்னிடமிருந்து தூரமாய்...
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???
~~~~~~ ~~~~~~~ ~~~~~~~ ~~~~~~~ ~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக