யார் வீட்டுப் பிள்ளை இவள்?
அடி பெருத்து...
இடை சிறுத்து...
வளர்ந்து நிற்பவளின்....
அழகு மேனியில் தெரிகிறது,
பருவ வளர்ச்சியின் படிமங்கள்!
அவளின் பருவக் குலையைப்
பார்க்கப் பார்க்க...
தாகம் எடுக்கிறது தானாக...!
தேகச்சூடு அடங்கும்வரை
பருகவேண்டும்
அவளின் இள நீரை!
வீசுகின்ற காற்றிலே அழகாய்
மெல்ல மெல்ல அசைகிறது
அவள் பச்சைக் கூந்தல்..!
இளங்குருத்தின் வாசம் வந்து
வெட்கத்தோடு அழைக்கிறது
ஏறி வா என்று...!
அவள் இடை அணைத்து...
அவளுடல் மீதேறி...
யாரோ கட்டியதை
திருட்டுத்தனமாய்...
மெல்ல அவிழ்த்திறக்கி
சத்தமின்றி மொத்தத்தையும்
ரசித்து...குடித்து...வெறித்து....
திகட்டும் போதையில் திளைத்து,
பின் களைத்துப் போக.....
அவள் தோப்பில் அவளோடு,
கொஞ்ச நேரம் தூங்கினாலும்,
அதுவல்லோ சுகம்...!!!
~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~
குறிப்பு :
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு திருட்டுத்தனமாக தென்னந்தோப்புகளில் இளநீரையும், யாரோ கட்டிவிட்ட முட்டியிறக்கி தென்னங் கள்ளினையும்
குடித்து மகிழ்ந்த பழைய ஞாபகங்களோடு, கொஞ்சம் காமரசம் கலந்து ..... கள்வனின் காதலியாக!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக