பாற்கடலில் பாவை குளிக்க
அதைப்பார்த்துக் கண்கள் களிக்க
நனைந்த தேகத்தில் அங்கங்கே
மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்!
மெல்ல மெல்லப் பாலாடை விலக
சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற
முழுதான நிர்வாணத்தின் அழகில்
சொக்கிப்போகிறது மனசு!
பாவையவள் பார்வையாலே
எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்!
ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட
இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே!
கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி
தன் அவசரத்தைக் காட்டுகிறாள்!
ஜன்னலைத் திறந்துவைத்தால்
என் கட்டில் வரை வருவாள்!
காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும்,
என் இரவு.... இவளோடு கழியும்!
அழகான, இவள் தேகம் புணர்வதினால்
என் இதயம்.... இதமாகக் களிக்கும்!
காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை
காலையில் பார்க்கும்போது...
நேற்றைய இரவை அவளோடு களித்ததும்
நீங்காமல் நினைவில்வரும்!
மீண்டுமவளைப் புணர்வதற்கு...
இன்னுமொரு பெளர்ணமி இரவுக்காய்
காத்துக்கிடக்கின்றன கண்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக