விரிந்து கிடக்கும் பூக்களில்
தேன் குடிக்கும் வண்டினைப்போல்...
திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!!
அதிசயம் ஆனால் உண்மை...!
பக்கத்து வீட்டில்தான்
பால்நிலா வசிக்கிறது!!!
நிலவுக்கும் எனக்குமான
சில அடி தூரங்களும்
பலகோடி ஒளியாண்டு
இடைவெளியாய்த் தெரிகிறதே!!!
இத்தனை நாளாய்ப் பார்க்காமல்
எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!!
ஏய் நிலவே...!!!
பறந்து போகும் என் எண்ணங்களுக்கு
சிறகுகளை இலவசமாய்...
நீதான் கொடுத்தாயோ???
மொத்தமாய் மறந்துபோகிறேன்
என்னை நானே..!!!
வீசுகின்ற பருவக் காற்றை
நீதான் அனுப்பி வைத்தாயோ???
மெதுவாய் என் பக்கம் வந்து
உன் பருவத்தின் வாசனையை
பக்குவமாய்ச் சொல்லுதடி!!!
அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே
இங்கே கூடுவிட்டு நழுவுதடி என் இதயம்!
உன் கன்னக் குழியில் தவறி விழுந்து,
உன் நெஞ்சத்தின் உச்சிவரை...
துள்ளி எழும்புதடி என் ஆசைகள்!!!
என் அயல் வீட்டுக் கயல்விழியே...!
இராமுழுதும் கனாக்களோடு களைத்துவிட்டேன்...!
அதிகாலையிலும் என்னை அலைக்கழிக்காதே...!!
கொஞ்சம் வந்து நில்லடி
உன் ஜன்னலோரம்...!!!
கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்
உன் வதனம் பார்க்கையிலே...
பால்நிலவைப் பார்த்து
நிலாச் சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!
**********************************************************
முக்கிய குறிப்பு:
பக்கத்து வீட்டில் ஒரு அழகான பொண்ணு இருந்து.... அந்தப் பொண்ணை 'சைற்' அடித்து 'றூட்டு' விடும் பெரும்பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. (எனக்கு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் கிடைத்தது -அது ஒரு கதை)
அந்தப் பெரும்பாக்கியம் கிடைத்த பாக்கியவான்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக