Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஜூலை, 2011

நீயில்லையென்றால்...

தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும்
கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்!
நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் அதிகாலைகளில்...!
இப்பொழுதெல்லாம்...  அதிவிரைவுச் சாலைகள் எனக்கு ,
பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது !
வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை!
சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை 
என்று தோன்றும்போது,
சில அசாதாரணங்கள் கூட....
சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ?
நான் செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!

2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

வாழ்க்கை இன்னும் வாழ இருக்கிறது வாழ்ந்து தான் பாருங்களேன்

Unknown சொன்னது…

நன்றி அக்கா! வாழுவோம்.......!

கருத்துரையிடுக